மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் + "||" + Free bicycles for 914 students in Kallakurichi

கள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

கள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
கள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் கலெக்டர் கிரண்குராலா, பிரபு எம்.எல்.ஏ. வழங்கினர்.
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் கிரண்குராலா, பிரபு எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரூ.35 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 370 பேர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 544 பேர் என மொத்தம் 914 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், பெற்றோர்-ஆசிரியர் கழக செயலாளர்கள் குபேந்திரன், சர்புதீன், துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர்கள் ரவி, அப்துல்கரீம், இயக்குனர் அருண்கென்னடி மற்றும் இயக்குநர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
2. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகலாம் அமைச்சர் பேச்சு
கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகலாம் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
3. 238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
4. காணை ஒன்றியத்தில் 1,355 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
காணை ஒன்றியத்தில் 1,355 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
5. மாவட்டத்தில் விரைவில் வேளாண் பட்டய கல்லூரி தொடங்க நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் வேளாண் பட்டயக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை