மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தில் பொங்கல் விழா + "||" + Pongal festival at Mamallapuram

மாமல்லபுரத்தில் பொங்கல் விழா

மாமல்லபுரத்தில் பொங்கல் விழா
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் பொங்கல் விழா நடந்தது.
மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி ராஜாராமன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் பலர் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர்.

விழாவில் கம்பு சுற்றுதல், வாள் சுற்றுதல், சிலம்பம், நெருப்பு மூட்டி ஓடு உடைத்தல் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள், பரதநாட்டியம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

பின்னர் விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் உறியடி பானை உடைக்கும் போட்டியில் கலந்து கொண்டு கண்களை கட்டிக்கொண்டு உறியடி பானை உடைத்தனர். விழாவில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராகவன், மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரத்தில் கலாசார கலை விழா தொடக்கம்; அடுத்த மாதம் 21-ந்தேதி வரை நடைபெறும்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலாசார கலைவிழா நடத்தப்படுவது வழக்கம்.
2. பெரியார் திடலில் பொங்கல் விழா: திரைத்துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பெரியார் விருது - கி.வீரமணி வழங்கினார்
சென்னை பெரியார் திடலில் நடந்த விழாவில் திரைத்துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பெரியார் விருதை, கி.வீரமணி வழங்கினார்.
3. தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
4. மாமல்லபுரத்தில் செல்போன் சிக்னல் கோளாறால் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிரமம்; புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மாமல்லபுரத்தில் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறுவதில் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
5. மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் புராதன சின்னத்தை கடல்நீர் சூழ்ந்தது
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு புராதன சின்னத்தை கடல்நீர் சூழ்ந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை