ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது


தண்ணீருக்குள் நடந்து வரும் பொட்டகவயல் கிராமமக்களை படத்தில் காணலாம்
x
தண்ணீருக்குள் நடந்து வரும் பொட்டகவயல் கிராமமக்களை படத்தில் காணலாம்
தினத்தந்தி 16 Jan 2021 11:48 PM GMT (Updated: 16 Jan 2021 11:48 PM GMT)

நயினார்கோவில் அருகே கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் கிராமமக்கள் கடும் அவதிடைந்தனர்.

கண்மாயில் உடைப்பு
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டகவயல் கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு தற்போது கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி தாலுகாவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொட்டகவயல் கிராமம் அருகே உள்ள வைகை, நாரை கண்மாய் நிரம்பி பொட்டகவயல் கிராம பகுதியில் தண்ணீர் புகுந்து அங்குள்ள அரசு பள்ளி மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் 
தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போராட்டம்
இதன் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சரி செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story