திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி போராட்டம் + "||" + Struggle to get rid of stagnant rainwater in Trincomalee
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி போராட்டம்
திருச்சி சங்கிலியாண்டபுரம் சுப்பையாத்தெரு விரிவாக்கம் பகுதியில் அஸ்வின்நகர் உள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் சூழந்துள்ளது.
திருச்சி,
திருச்சி சங்கிலியாண்டபுரம் சுப்பையாத்தெரு விரிவாக்கம் பகுதியில் அஸ்வின்நகர் உள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் சூழந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து மழைநீரை அப்புறப்படுத்தக்கோரியும், அந்த பகுதியில் சாலை வசதி செய்து தர கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி செயலாளர் சிவகுமார் தலைமையில் 30 பேர் நேற்று மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்கி கிடந்த மழைநீரில் இறங்கி மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் சங்கிலியாண்டபுரம் மெயின்ரோட்டுக்கு சென்று சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் மற்றும் அதிகாரிகள் ேபச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழக மகளிர் அணி சார்பில் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களில் குப்பைகள் சேகரிப்பது, மக்கும் குப்பைகளை தரம் பிரிப்பது போன்ற பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.