மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் + "||" + Farmers carrying black flags protest in the fields demanding relief for paddy fields affected by continuous rains

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக எரவாஞ்சேரி, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகி வருகிறது.

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். சதவீத அடிப்படையில் நிவாரணம் வழங்குவதை தமிழக அரசு கைவிட்டு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்.

வயலில் இறங்கி போராட்டம்

ஈரப்பதம் கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என வலியுறுத்தி மருங்கூர் மற்றும் எரவாஞ்சேரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மருங்கூர் ஊராட்சி விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க செயலாளர் முத்து தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், விவசாய சங்க பிரதிநிதிகள் நாகராஜ் அய்யர், ஏசுராஜேந்திரன், குருமூர்த்தி, சேகர், ராஜி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

அதேபோல் எரவாஞ்சேரியில் விவசாய சங்க செயலாளர் பாலு, ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் அனைவருக்கும் கணக்கெடுப்பு ஏதும் செய்யாமல் 100 சதவீதம் இன்சூரன்ஸ் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வடகுடி கிராமம்

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து அழுகி வருகிறது. நாகையை அடுத்த வடகுடி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர் பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாதிக்கபட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பயிர் பாதிப்புகளை இதுவரை கணக்கெடுப்பு நடத்தாதை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. எரிபொருள் விலை உயர்வு: பெட்ரோலிய அமைச்சகம் முன் இளைஞர் காங்கிரசார் போராட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பெட்ரோலிய அமைச்சகம் முன் இளைஞர் காங்கிரசார் இன்று போராட்டம் நடத்தினர்.
2. கோடை நடவு பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
கோடை நடவு பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
3. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிலாளர் நல ஆணையம் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
மூன்றாவது நாளாக நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு, தொழிலாளர் நல ஆணையம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
4. விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
மேட்டூரில் இருந்து உபரிநீரை அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் தொகையை அரசே ஏற்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.