மாவட்ட செய்திகள்

புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் காலமானார் + "||" + Pondicherry BJP nominee Shankar passes away

புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் காலமானார்

புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் காலமானார்
புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினரும், பொருளாளருமான சங்கர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
புதுச்சேரி,

புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சியின் பொருளாளரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சங்கர், இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று இரவு உறங்கச் சென்ற அவர் இன்று காலை வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சங்கரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இரவு உறக்கத்தின் போது மாரடைப்பால் சங்கர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினரும், பொருளாளருமான சங்கர் உயிரிழந்திருப்பது பாஜகவிற்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடக்கம்
புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
2. புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு பொய்யானது - நாராயணசாமி
புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு பொய்யானது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
3. புதுச்சேரி சபாநாயகர் பதவியில் இருந்து சிவக்கொழுந்து ராஜினாமா
புதுச்சேரி சபாநாயகர் பதவியில் இருந்து சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார்.
4. புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு
புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.