திருக்கோவிலூர் அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி


திருக்கோவிலூர் அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 17 Jan 2021 4:40 AM GMT (Updated: 17 Jan 2021 4:40 AM GMT)

திருக்கோவிலூர் அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.

திருக்கோவிலூர், 

பொங்கல் பண்டிகையை யொட்டி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பால மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவருமான ஏ. ஆர்.வாசிம் ராஜா தலைமை தாங்கினார். அரகண்டநல்லூர் தொழிலதிபர் ஏ.ஆர். ஹக்கீம் விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். பள்ளி நிர்வாகி தொழிலதிபர் எம்.எஸ்.கே.அக்பர் வரவேற்றார். தாளாளர் காமிலாபேகம்அக்பர், தொழிலதிபர் எம்.எஸ்.கே.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தொழிலதிபர் காடகனூர் கே.சச்சிதானந்தம் போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 28 அணிகள் கலந்துகொண்டன. முடிவில் முகையூர் அணி முதலிடத்தையும், திருக்கோவிலூர் அணி 2-வது இடத்தையும், அருமலை அணி 3-வது இடத்தையும் பிடித்தது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையை வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் அரகண்டநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொறுப்புக் குழு உறுப்பினர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் முருகன், மில் அதிபர் சங்கர், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம், திருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கி் முன்னாள் செயலாளர் ரகோத்தமன், திருக்கோவிலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் செல்வம், முன்னாள் மாணவர்கள் தெய்வீகன், சாய்ராம், துரை, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.விழாவில் கலந்துகொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு பள்ளி நிர்வாகி அக்பர் நினைவு பரிசு வழங்கினார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.



Next Story