விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2021 5:21 AM GMT (Updated: 17 Jan 2021 5:21 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

விக்கிரவாண்டி, 

இந்தியா முழுவதும் முதல்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களபணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும்பணி நேற்று தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங். கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் முதல் தடுப்பூசி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பணியாளராக வேலை பார்த்து வரும் பரமேஸ்வரன் என்பவருக்கு போடப்பட்டது. அதனை தொடர்ந்து மற்றவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த பின்னர் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

400 பேர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட மருத்துவ துறையைச் சேர்ந்த 11,688 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,

விழுப்புரம் அரசு மருத்துவமனை, விக்கிரவாண்டி வட்டார மருத்துவமனை மற்றும் சிறுவந்தாடு வட்டார அரசு மருத்துவமனையில் தடுப்பூசி பேடும்பணி நடைபெறுகிறது. 4 இடங்களிலும் ஒரு நாளைக்கு தலா 100 பேர் வீதம் தினமும் மாவட்டத்தில் 400 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட முன்பதிவு செய்பவர்களின் அடிப்படையில் கூடுதல் மையங்கள் செயல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., சாந்தி, மருத்துவத்துறை பேராசிரியர் மார்ட்டின், நேர்முக உதவியாளர் லட்சாதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story