ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர அ.தி.மு.க. பாடுபடுகிறது; அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு


சிவகாசி பள்ளப்பட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
x
சிவகாசி பள்ளப்பட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
தினத்தந்தி 18 Jan 2021 12:51 AM GMT (Updated: 18 Jan 2021 12:51 AM GMT)

ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர அ.தி.மு.க. அரசு பாடுபட்டு வருகிறது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள்
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது.

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி, திருத்தங்கல், குறுக்குபாதை, விருதுநகர் ரோடு, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், ஆனையூர், செங்கமலநாச்சியார் புரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

செங்கமலநாச்சியார்புரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. வெற்றி பெறும்
ஜெயலலிதாவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தில் நல்லாட்சியை கொடுத்து வருகிறார்கள்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். தொடர்ந்து அ.தி.மு.க. 3 முறை ஆட்சி செய்த பெருமையை பெறும். அ.தி.மு.க. ஹாட்ரிக் சாதனை செய்யும்.

புறக்கணியுங்கள்
ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர இந்த அரசு பாடுபட்டு வருகிறது. இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி சிலர் ஓட்டு கேட்க வருவார்கள். அவர்களை நீங்கள் புறக்கணியுங்கள்.

மக்களுக்காக உழைக்கும் அ.தி.மு.க.வை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் அசன்பதுருதீன், பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணி, பலராம், கருப்பசாமி, தெய்வம், மாவட்ட நிர்வாகிகள் சுபாஷினி, டாக்டர் விஜயஆனந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் வடமலாபுரம் ஆழ்வார்ராமானுஜம், சுடர்வள்ளி சசிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி நாராயணன், நாகராஜன், நிர்வாகிகள் ரவிசெல்வம், சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி, ஆ.செல்வம், காளிராஜ், மகளிர் அணி நாரணாபுரம் மகேஸ்வரி, திருத்தங்கல் ராதா, பாண்டியன்நகர் முருகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடமலாபுரம்
சிவகாசி அருகே உள்ள வடமலாபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சுபாஷினி முன்னிலை வகித்தார். வடமலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம் வரவேற்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி சசிகுமார், மகளிரணி மகேஸ்வரி, பிலிப் வாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனுப்பன்குளத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி சமூக ஆர்வலர் பாண்டியராஜ் இனிப்பு வழங்கினார்.

ஆலங்குளம்
ஆலங்குளம் டி.என்.சி.முக்கு ரோட்டில் நடைபெற்ற விழாவிற்கு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் விஜயநல்லதம்பி தலைமை தாங்கினார். இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஆலங்குளம் பரமேஸ்வரி, விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் புலிப்பாறை பட்டிமணிகண்டன், வெம்பகோட்டை மேற்கு ஒன்றிய மாணவர் அணிசெயலாளர் சங்கரமூர்த்தி பட்டிமுருகன், வெம்பகோட்டை மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாதாங்கோவில்பட்டி ஜெயசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story