மராட்டியத்தில் தடுப்பூசி போட்ட யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை மந்திரி ராஜேஷ் தோபே தகவல்


மராட்டியத்தில் தடுப்பூசி போட்ட யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
x
தினத்தந்தி 18 Jan 2021 1:21 AM GMT (Updated: 18 Jan 2021 1:21 AM GMT)

மராட்டியத்தில் தடுப்பூசி போட்ட யாருக்கும் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் நேற்று முன்தினம்  சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. மும்பை உள்பட மாநிலம் முழுவதும் அன்று 18 ஆயிரத்து 425 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்தநிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் இதுவரை பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு யாருக்கும் பக்கவிளைவோ அல்லது பாதிப்பு ஏற்பட்டதாகவோ இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எல்லாம் பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பாக இருக்கும்.

கோவிட் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (நாளை) முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.

மேலும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள முடியும். இந்த வகையில் செவ்வாய் முதல் வெள்ளிவரை அந்த பணிகள் நடைபெறும". இவ்வாறு அவர் கூறினார்.

Next Story