நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2021 2:22 AM GMT (Updated: 18 Jan 2021 2:22 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதையொட்டி அவர் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் கடைவீதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., அன்னதான நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பிரதான சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படங்களுக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில் பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேகர், ராஜா என்கிற செல்வகுமார், கோபிநாத், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவசிதம்பரம், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் சாதிக்பாஷா, நகர பொருளாளர் ராஜா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜய்பாபு மற்றும் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை திடலில் நேற்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ஜி.கே.வீரப்பன், பேரூர் இணை செயலாளர் நாகலட்சுமி, துணை செயலாளர் கென்னடி, ஒன்றிய மீனவரணி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பேசினார். இதில் சேந்தமங்கலம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், நடராஜன், ஒப்பந்ததாரர் நாச்சிபுதூர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள மேட்டு தெரு மற்றும் பச்சுடையாம்பட்டி புதூர் உள்பட பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்சரஸ்வதி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம்.டி.சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்லப்பன், முன்னாள் தொகுதி செயலாளர் சபரி தங்கவேல், ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் குருசாமி, நகர வங்கித் தலைவர் ராமமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க தலைவர் பழ.ராமலிங்கம், தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் நல்லகுமார், நகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் சாணார்பாளையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பொன்சரஸ்வதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.வுக்கு, மாவட்ட பிரதிநிதி சுசிலா நாகராஜன் வெள்ளியிலான வீர வாள் ஒன்றை பரிசளித்தார். இதில் மல்லசமுத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் அலமேலு விஜியன், எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பொன்சரஸ்வதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

ராசிபுரம்

ராசிபுரம் ஒன்றியம், சந்திரசேகரபுரம் கிராமத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.சுந்தரம் மாலை அணிவித்தார். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் மணிவேம்புசேகரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பாலன், அய்யங்காடு கிளை செயலாளர் சின்னபையன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பாலாமணி, ஒன்றிய இணை செயலாளர் முத்தாயி குமார், ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணை தலைவர் முத்துசாமி, கூட்டுறவு சங்க தலைவர் தியாகராஜன், மற்றும் முத்து, நடேசன், நெடுஞ்செழியன், ராமசாமி, ஆண்டியப்பன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அக்ரஹாரம், பெரியூர், நேரு நகர், கரட்டுப்பட்டி, தட்டாங்குட்டை, கலரம்பட்டி, தெற்குப்பபட்டி அண்ணாநகர் உள்பட பல இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சந்திரசேகரபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேம்புசேகரன் கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதேபோல் பட்டணம் பேரூராட்சி அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்.படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம், மோகனூர்

பள்ளிபாளையம் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆவாரங்காட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு நகர அ.தி.மு.க. செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், பேரவை நிர்வாகி வைத்தி, எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் முஸ்தபா, சிவக்குமார், மனோகரன், மாவட்ட பிரதிநிதி கே.கே.செல்வராஜ், பாதரை ஊராட்சி தலைவர் கணேசன், புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மோகனூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவுக்கு மோகனூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கருமண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்கமுத்து வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ருத்ராதேவி சரவணன், லத்துவாடி கூட்டுறவு கடன் சங்க தலைவர் அம்மையப்பன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மதியழகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி அ.தி.மு.க.வினர் மோகனூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி பாஸ்கர், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பாண்டியன், கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் அர்த்தனாரிஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் சிவஞானம் நன்றி கூறினார். இதேபோல் மோகனூர் சுற்று வட்டார பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

Next Story