ஓட்டுனர் உரிமம் பெற எலெக்ட்ரானிக் சோதனை தளம்; கோவையில் அமைக்க முடிவு
ஓட்டுனர் உரிமம் பெற, எலெக்டிரானிக் சோதனை தளம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
எலெக்ட்ரானிக் சோதனை தளம்
கோவை மாவட்டத்தில் மொத்தம் 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்காக ஓட்டுனர் உரிமம் பெற வெளிப்பகுதிகளில் உள்ள சாலைகளிலேயே சோதனைகள் நடைபெறுகிறது.
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனங்களுக்கான டிராக் உள்ளது. கரூரில் உள்ளது போல், எலெக்ட்ரானிக் சோதனை தளம் (எலெக்ட்ரானிக் டெஸ்டிங் டிராக்) கோவையில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சரியாக ஓட்டினால் உரிமம்
கோவை தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களை இணைத்து அனைத்து அடிப்படை வசதிகளு டன் இந்த சோதனை தளம் அமைக்கப்பட உள்ளது. வாகனங் களை ஓட்டுபவர்கள் சரியாக ஓட்டாவிட்டால் தானியங்கி சிக்னல் (சென்சார்) மூலம் பயிற்சியில் தோல்வி என்று தகவல் வந்துவிடும். இதனால் ஓட்டுனர் உரிமம் பெற முடியாது.
சரியாக ஓட்டினால் உரிமம் கிடைத்துவிடும். எஸ் வடிவம், எச் வடிவத்தில் வாகனங்களை சரியான முறையில் ஓட்டி காண்பிக்க வேண்டும். இதற்கு தகுந்தவாறு சோதனை தளம் அமைக்கப்படும்.
ரூ.50 கோடி
கோவையில் ரூ.50 கோடி செலவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 5 ஏக்கர் பரப்பளவில் இதனை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொடிசியாவின் பின்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்திலோ அல்லது வேறு பகுதியிலோ இதனை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின் இந்த பணிகள் தொடங்கும்.
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் புதிய வாகனங்களை பதிவு செய்பவர்களுக்கு புத்தக வடிவில் ஆர்.சி.புத்தகம் வழங்காமல், ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப் படுகிறது. "ஹை செக்யூரிட்டு ரிஜிஸ்டிரேசன்"என்று இது அழைக்கப்படுகிறது. கொரோனா காலத்துக்கு பின்னர் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்டஅனைத்து
பணிகளும் ஆன்லைன் முறைப்படி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story