பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 155 பேருக்கு கொரோனா தடுப்பூசி


பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 155 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 Jan 2021 12:13 AM GMT (Updated: 19 Jan 2021 12:13 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனரும், அரசு டாக்டர் ஒருவரும் என மொத்தம் 2 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்ததால் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் யாரும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் ஆளாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் கீதாராணி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 155 சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் கீதாராணி ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story