மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது + "||" + Worker arrested for trying to rape girl

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சென்னப்பன். இவரது மகன் கோவிந்தசாமி (வயது 19). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கோவிந்தசாமி அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டின் மேல்மாடிக்கு தூக்கி சென்றார். இதை பார்த்த சிறுமியின் தம்பி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மேல்மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது வாலிபர் கோவிந்தசாமி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர் கோவிந்தசாமிக்கு தர்மஅடி கொடுத்து பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

போக்சோவில் கைது

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. சீர்காழி அருகே காரில், சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
சீர்காழி அருகே காரில் சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது
சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது.
3. இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது
இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது.
4. பமீலா கோஸ்வாமி போதை பொருள் வழக்கு: பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங், 2 மகன்கள் கைது
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது 2 மகன்களை போதை பொருள் வழக்கொன்றில் போலீசார் கைது செய்துள்ளனர்.
5. கோவையில் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் 640 பேர் கைது
கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் 640 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை