மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா + "||" + MGR in Namakkal district. Birthday party

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நாமக்கல்,

திருச்செங்கோடு வடக்கு ஒன்றியம் வட்டூர் ஊராட்சி மோர்பாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வட்டூர் கூட்டுறவு வங்கி தலைவர் சின்னுசாமி, வட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், கவுன்சிலர் சுதா ஜோதி, மோர்பாளையம் பெரியசாமி, ஓட்டல் சேகர், வார்டு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சக்திவேல் மற்றும் இளைஞர், இளம்பெண் பாசறை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பி.ஆர்.சுந்தரம் மாலை அணிவித்தார். இதில் நகர நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராசிபுரம் நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் எம்.ஜி.ஆர். படங்கள் வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

ராசிபுரம் 18-வது வார்டில் ரேஷன் கடை அருகில் எம்.ஜி.ஆர். படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு நகர வங்கி இயக்குனர் சீரங்கன் முன்னிலை வகித்தார். நகர செயலாளரும், நகர வங்கித்தலைவருமான பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். இதில் நகர மாணவர் அணி செயலாளர் ஜெகன், நகர இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கார்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீதர் மற்றும் மாது, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா அனைத்து கிராமங்களிலும் கொண்டாடப்பட்டது. இதில் நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க தலைவருமான இ.கே.பொன்னுசாமி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய அவைத்தலைவரும், மங்களபுரம் கூட்டுறவு சங்க தலைவருமான ஜோதிலிங்கம், சுப்பிரமணியம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா பாலப்பட்டியில் மோகனூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சந்திரமோகன் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில்‌‌ மோகனூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வளர்மதிசெல்வம், பாலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் திருக்குமரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பெரமாண்டை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜேடர்பாளையத்தில்‌ கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரவி தலைமையில் ‌எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா ‌நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் யசோதா செல்வராஜ், வடகரையாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், வடகரையாத்தூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் சாமியப்பன், வடகரையாத்தூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
2. திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் நடந்தது.
3. கரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
கரூர் மாவட்டத்தில் நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
4. திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டத்தை கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்து கொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
5. திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.