தேனி அருகே அரண்மனைப்புதூரில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராமசபை கூட்டம் நாளை நடக்கிறது
தேனி அருகே அரண்மனைப்புதூரில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராமசபை கூட்டம் நாளை நடக்கிறது.
தேனி,
தமிழகத்தில் 'அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி அருகே போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரண்மனைப்புதூரில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி அளவில் மக்கள் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை தி.மு.க.வினர் மும்முரமாக செய்து வருகின்றனர். அதன்படி சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மு.க.ஸ்டாலின் வருகை
இந்தநிலையில் மக்கள் கிராம சபை கூட்டம் நடக்க உள்ள மைதானத்தில் நடந்துவரும் முன்னேற்பாடு பணிகளை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தெற்கு மாவட்டபொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், சரவணக்குமார், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு தேனி வருகிறார். இரவில் தேனியில் தங்குகிறார். முன்னதாக தேனி மாவட்டத்திற்கு வரும் அவருக்கு பெரியகுளத்தில் இன்று மாலை ஒருங்கிணைந்த தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story