மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2021 7:42 PM IST (Updated: 19 Jan 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

அரக்கோணம், 

அரக்கோணத்தை அடுத்த கணபதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் பங்கேற்றோர் அரசு புறம்போக்கு, நீர்நிலை இடங்கள், கோவில் நிலங்கள் ஆகியவற்றில் குடியிருப்போருக்கு மாற்று இடம், ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும், கணபதிபுரம் இருளர் மற்றும் குளக்கரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாற்று இடம், பட்டா வழங்குதல், நீர் ஆதாரங்களாக விளங்கும் குளம், குட்டைகள், கால்வாய்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தூர்வாரி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து கணபதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் வனிதாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். போராட்டத்துக்கு கிளை செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். ஏகலைவன், சி. துரைராஜ், ஆர். வெங்கடேசன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story