அருப்புக்கோட்டையில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி - பொதுமக்கள் அதிர்ச்சி


அருப்புக்கோட்டையில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி - பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 19 Jan 2021 8:59 PM IST (Updated: 19 Jan 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி நடப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அஜிஸ் நகரைச் சேர்ந்தவர் ஜாக்குலின் (வயது 54). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர் விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.

இதுகுறித்து ஜாக்குலின் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் பணம், நகை ஏதும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றது தெரியவந்துள்ளது.

அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை காயிதே மில்லத் ெதருவில் உள்ள ஜெசிமா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அருப்புக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story