மைசூரு-தூத்துக்குடி ரெயில் மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிப்பு தென்மேற்கு ரெயில்வே தகவல்


மைசூரு-தூத்துக்குடி ரெயில்
x
மைசூரு-தூத்துக்குடி ரெயில்
தினத்தந்தி 20 Jan 2021 2:15 AM IST (Updated: 19 Jan 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

மைசூரு-தூத்துக்குடி ரெயில் சேவை வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

மைசூரு-தூத்துக்குடி ரெயில் சேவை வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

78 சிறப்பு ரெயில்கள் சேவை

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு தென்மேற்கு ரெயில்வே சார்பில் பெங்களூரு, மைசூரு உள்பட கர்நாடகத்தின் சில பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 78 சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது. இதுதொடர்பாக தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கே.எஸ்.ஆர். பெங்களூரு-ஜோத்பூர் இடையே வாரத்தில் திங்கள், வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில் (வண்டி எண்:-06508) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை இந்த மாதம் 27-ந் தேதியுடன் நிறுத்தப்பட இருந்தது. ஆனால் தற்போது இந்த ரெயில் சேவை மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஜோத்பூர்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் (06507) வாரத்தில் சனி, செவ்வாய்க்கிழமைகளில் இயங்கி வருகிறது. இந்த ரெயில் சேவை இந்த மாதம் 30-ந் தேதியுடன் நிறுத்தப்பட இருந்தது. தற்பாது இந்த ரெயில் சேவை வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

மைசூரு-அஜ்மீர்

மைசூரு-அஜ்மீர் இடையே வாரத்தில் செவ்வாய், வியாழக்கிழமைகளில் இயங்கி வரும் ரெயில் (06210) சேவை வருகிற 28-ந் தேதியுடன் முடிய இருந்தது. ஆனால் இந்த ரெயில் சேவை மார்ச் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அஜ்மீர்-மைசூரு இடையே வாரத்தில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் ரெயில் (06209) இந்த மாதம் 31-ந் தேதியுடன் நிறுத்தப்பட இருந்தது. ஆனால் இந்த ரெயில் சேவை ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்னை இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள் (02608/02607) சேவை வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெற இருந்தது. ஆனால் இந்த ரெயில்களின் சேவையும் மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மைசூரு-மயிலாடுதுறை இடையே சிறப்பு ரெயில் (06232) இயங்கி வருகிறது. இந்த ரெயில் சேவை இந்த மாதம் 30-ந் தேதியுடன் நிறைவு பெற இருந்தது. ஆனால் தற்போது மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மயிலாடுதுறை-மைசூரு ரெயில் (06231) சேவை வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெற இருந்தது. தற்போது இந்த ரெயில் சேவை ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மைசூரு-தூத்துக்குடி

மைசூரு-தூத்துக்குடி இடையே இயங்கும் சிறப்பு ரெயில் (06236) இந்த மாதம் 31-ந் தேதி வரை இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரெயில் சேவை மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தூத்துக்குடி-மைசூரு ரெயில் (06235) வருகிற 30-ந் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த ரெயில் சேவை ஏப்ரல் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06526) இந்த மாதம் 31-ந் தேதி வரை இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ரெயில் சேவை மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் (06525) பிப்ரவரி மாதம் 2-ந் தேதியுடன் நிறைவு பெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட ரெயில்கள் உள்பட 78 ரெயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.


Next Story