ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்; அழகான பெண் குழந்தை பிறந்தது


அழகான பெண் குழந்தை
x
அழகான பெண் குழந்தை
தினத்தந்தி 20 Jan 2021 1:38 AM IST (Updated: 20 Jan 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு நடந்த பிரசவத்தின் போது அழகான பெண் குழந்தை பிறந்தது.

கரூர்,

கரூர் மாவட்டம், மகிழிபட்டியை சேர்ந்தவர் தினேஷ். இவருடைய மனைவி சரண்யா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியான சரண்யாவை பிரசவத்திற்காக கள்ளப்பள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். 

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்று கொண்டிருந்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்வதற்குள் சரண்யாவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. நிலைமையை உணர்ந்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் ஆம்புலன்சை மெதுவாக இயக்க செய்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். 

அப்போது வீரராக்கியம் அருகே சரண்யாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும், குழந்தையும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனர். தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர் சீனிவாசன் மற்றும் பைலட் பிரபு ஆகியோரை சரண்யாவின் உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story