நெல்லையில் இறுதி பட்டியல் வெளியீடு: 5 சட்டமன்ற தொகுதிகளில் 13½ லட்சம் வாக்காளர்கள் ஆண்களைவிட பெண்களே அதிகம்
நெல்லை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நெல்லை உள்பட 5 சட்டமன்ற தொகுதிகளில் 13½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
நெல்லை,
தமிழக தேர்தல் ஆணையம் சார்பில், மாநிலம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் பெற்றுக்கொண்டார்.
பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
13½ லட்சம் வாக்காளர்கள்
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 62 ஆயிரத்து 326 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 90 ஆயிரத்து 732 பெண் வாக்காளர்களும், 101 இதர வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 53 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். 18 முதல் 19 வயது நிரம்பிய வாக்காளர்கள் 27 ஆயிரத்து 205 பேர் உள்ளனர். 20 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 13 லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் உள்ளனர்.
தொடர்முறை திருத்தம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் 6 லட்சத்து 45 ஆயிரத்து 494 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 71 ஆயிரத்து 179 பெண் வாக்காளர்களும், 89 இதர வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 762 பேர் இடம் பெற்றிருந்தனர்.
கூடுதல் வாக்குசாவடிகள்
கடந்த 1-ந்தேதியை தகுதி நாளாகக் கொண்டு, கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந்தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்தது. கடந்த நவம்பர் மாதம் 21, 22 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.
இதில் புதிதாக ஆண் வாக்காளர்கள் 20 ஆயிரத்து 124 பேரும், பெண் வாக்காளர்கள் 22 ஆயிரத்து 626 பேரும், இதர வாக்காளர்கள் 12 பேரும் என மொத்தம் 42 ஆயிரத்து 762 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இறந்தவர்கள் 5,254 பேரும், இரட்டை பதிவுகளுக்காக 213 வாக்காளர்களும் மற்றும் இடம் மாறிச் சென்ற 898 வாக்காளர்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 365 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 7,498 வாக்காளர்களின் பெயர் மற்றும் இதர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 3,665 வாக்காளர்களின் முகவரி மாற்றம் செய்யப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றவர்களுக்கு வருகிற 25-ந்தேதி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து கட்சி கூட்டம்
தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், தி.மு.க.வைச் சேர்ந்த செல்வசூடாமணி, கணேஷ்குமார் ஆதித்தன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தேவேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முத்துகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story