நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2021 1:31 AM IST (Updated: 21 Jan 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகர், பாளையங்கோட்டை யூனியன், மானூர், களக்காடு, ராதாபுரம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்கள்.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகர், பாளையங்கோட்டை யூனியன், மானூர், களக்காடு, ராதாபுரம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்கள்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 208 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 212 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 87 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள். இதில் ஆலங்குளத்தில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 8 ஆயிரத்து 170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் 158 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 35 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது. இதில் 16 ஆயிரத்து 37 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 43 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

Next Story