நாகூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது


நாகூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2021 3:55 AM IST (Updated: 21 Jan 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகூர்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தல்படியும் நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில், பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகூரில் அலங்கார வாசல் பின்புறம் மற்றும் கடற்கரை சாலை ஆகிய இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அலங்கார வாசல் பின்புறம் உள்ள யானை கட்டி சந்தில் சந்தேகப்படும் வகையில் நின்று ெகாண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில் அவர்கள் தெத்தி சமரச நகரை சேர்ந்த முஜீபு ரகுமான் (வயது 50), நாகூர் வெற்றிலைகாரன் தெருவை சேர்ந்த ஹாஜாமெய்தீன் மகன் ஷாகுல் அமீது (38) என்பதும், இவர்கள்லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கடற்கரைக்கு செல்லும் வழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நாகூர் மெயின் ரோட்டை சேர்ந்த மன்சூர் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story