நாகை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு வகுப்பறையில் 25 பேருக்கு மட்டும் அனுமதி
நாகை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு வகுப்பறையில் 25 மாணவ-மாணவிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கானது பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பள்ளிகள் திறக்க பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
பள்ளிகள் திறக்கப்பட்டன
அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. நாகை வருவாய் மாவட்டத்தில் 310 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை முதலே 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயிலில் ஆசிரியர்கள் நின்று கொண்டு மாணவிகள் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என கண்காணித்தனர். தொடர்ந்து கைகளை சுத்தமாக கழுவ ஏதுவாக நுழைவு வாயிலில் சோப்பு மற்றும் வாளியுடன் தண்ணீர் வைக்கப்பட்டது. இதில் அனைவரும் கைகளை சுத்தமாக கழுவி விட்டு வகுப்பறைக்குள் சென்றனர்.
சமூக இடைவெளி
அதேபோல நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இதையடுத்து வகுப்பறையில் சமூக இடைவெளியுடன், அமரவைத்து ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தினர். ஒரு வகுப்பறையில் 25 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story