வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து: ரூ.20 லட்சம் எந்திரம், பஞ்சு எரிந்து நாசம்


வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து: ரூ.20 லட்சம் எந்திரம், பஞ்சு எரிந்து நாசம்
x
தினத்தந்தி 21 Jan 2021 6:15 AM IST (Updated: 21 Jan 2021 6:23 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள எந்திரம், பஞ்சு எரிந்து நாசம் ஆனது.

வெள்ளகோவில், 
 
கரூரை  சேர்ந்தவர் ஆர்.செல்வம். இவர் வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசில் நூல் மில் நடத்தி வருகிறார்.  இந்த மில் வளாகத்தில் கழிவுபஞ்சை அரைப்பதற்கு 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் தனியாக தகர சீட் போட்டு செட் அமைத்துள்ளார். 

அதில் கழிவு பஞ்சை அரைப்பதற்கு எந்திரங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் 3 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது  கழிவு பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்தது. உடனே தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதற்குள்  தீ மளமளவென எந்திரங்கள் மற்றும் கழிவு பஞ்சு, நல்ல பஞ்சுகள் மீது பரவியது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள்  உடனே வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தனசேகரன், வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அதற்குள் எந்திரம் மற்றும் பஞ்சு  எரிந்து நாசம் ஆனது. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. 

Next Story