செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனம் மோதி இளம்பெண் பலி
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த கல்குளம் புதிய தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் கலைச்செல்வி (வயது 29) திருமணமாகாத இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
நேற்றுமுன்தினம் காலை வீட்டில் இருந்து புறப்பட்ட கலைச்செல்வி சற்று தொலைவில் உள்ள கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.
அங்கு இருந்து கடலூர் - மதுராந்தகம் சாலையில் நடந்தே வீடு திரும்பினார்.
வழியில் கண்டிகை பெட்ரோல் நிலையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது பலமாக மோதி விட்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த கலைச் செல்வி உயிருக்கு போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story