வேப்பந்தட்டை பகுதியில் தொடர் மழையால் பருத்தி, மக்காச்சோளம் பயிர்கள் சேதம்; காப்பீடு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
வேப்பந்தட்டை பகுதியில் தொடர் மழையால் பருத்தி, மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதற்கான காப்பீடு தொகையை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் பருத்தி, மக்காச்சோளம், நெல் ஆகிய பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் திருத்திய காப்பீடு திட்டத்தின்கீழ் பருத்தி, மக்காச்சோளம், நெல், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அரசே முன்னின்று பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தியதால் ஏராளமான விவசாயிகள் கடந்த சில வருடங்களாக தங்கள் வயல்களில் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக தற்போது பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன.
காப்பீடு தொகை
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயிர் சேதத்தை கணக்கீடு செய்து காப்பீடு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டுமெனவும், காப்பீடு நிறுவனங்களில் இருந்து பயிருக்கு உரிய தொகை பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேப்பந்தட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story