ஜலகண்டாபுரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஜலகண்டாபுரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Jan 2021 2:52 PM IST (Updated: 21 Jan 2021 2:52 PM IST)
t-max-icont-min-icon

ஜலகண்டாபுரம் அருகே 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேச்சேரி:
ஜலகண்டாபுரம் அருகே 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரும் ஜலகண்டாபுரம் அருகே காப்பரத்தாம்பட்டி கணபதி நகர் பகுதியை சேர்ந்த நந்தினி (வயது 20) என்பவரும் காதலித்து வந்தனர்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பொங்கலுக்கு நந்தினி தனது தாய் வீட்டிற்கு கணவருடன் வந்தார். அப்போது தனது பெற்றோரிடம் பொங்கல் பண்டிகைக்கு பட்டுப்புடவை வேண்டும் என்று கேட்டுள்ளார். பெற்றோர் சம்பளம் வாங்கி எடுத்து தருவதாக கூறி உள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
பொங்கலுக்கு பட்டுப்புடவை கிடைக்கவில்லை என்று மனவருத்தத்துடன் இருந்தவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜலகண்டாபுரம் போலீசார்  அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன நந்தினியின் தாய் மகாலட்சுமி ஜலகண்டாபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story