மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர்  அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 21 Jan 2021 2:52 PM IST (Updated: 21 Jan 2021 2:52 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

மேட்டூர்:
மேட்டூர்  அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
மேட்டூர் அணை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 18-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 1,993 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,368 கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து மேலும் குறையுமானால் அணை நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. 
நீர்மட்டம்
நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 105.85 அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

Next Story