உறுதிமொழி ஏற்ற மருத்துவ மாணவர்கள்


உறுதிமொழி ஏற்ற மருத்துவ மாணவர்கள்
x
தினத்தந்தி 21 Jan 2021 2:53 PM IST (Updated: 21 Jan 2021 2:53 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சேலம்:
சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள்  உறுதிமொழி ஏற்றனர்.
உறுதிமொழி ஏற்பு
தமிழகம் முழுவதும் நேற்று எம்.பி.பி.எஸ். முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி, சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. 
முன்னதாக கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மருத்துவ சேவைக்கான உறுதிமொழி ஏற்றனர். இதில் கல்லூரி முதல்வர் மற்றும் துறை பேராசியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story