ஊசூரில் காளை விடும் விழா 7 பேர் காயம்
ஊசூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
அடுக்கம்பாறை
ஊசூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
வேலூரை அடுத்த ஊசூரில் காளை விடும் விழா நடந்தது. சப்-கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் பழனி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊசூர் வருவாய் ஆய்வாளர் பூங்கோதை வரவேற்றார்.
விழாவில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 51 காளைகள் கலந்துகொண்டன.
விழா தொடங்கியதும் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டது. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.
மாடுகள் முட்டியதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story