கரிக்காத்தூர்: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
கரிக்காத்தூரில் 100 நாள் வேலையில் முறைகேடு நடந்ததாக கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள கரிக்காத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் 100 நாள் பணிகள் சரிவர வழங்குவதில்லை.
100 நாள் பணியில் வழங்கும் தொகையில் முறைகேடுகள் நடந்துள்ளது.
மேல்கரிக்காத்தூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தெருக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் கழிவுநீர் கால்வாய் வழியாக செல்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்பது உள்பட பல்வேறு புகார்களை கரிக்காத்தூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story