மொரப்பூர் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா: அ.ம.மு.க. சார்பில் நல உதவிகள் - துணை பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் வழங்கினார்
மொரப்பூர் ஒன்றியத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு நல உதவிகளை துணை பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் வழங்கினார்.
மொரப்பூர்,
மொரப்பூர் ஒன்றிய அ.ம.மு.க. சார்பில் பன்னிக்குளம் ஊராட்சி திப்பம்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், ஆட்சி மன்ற குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.ஆர்.முருகன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ஏகநாதன், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சின்னசாமி வரவேற்று பேசினார்.
விழாவில் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச வேட்டி, புடவை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ஜி.எஸ்.குப்புசாமி, கவுதமன், மாவட்ட மாணவரணி செயலாளர் கனகராஜ், ஊராட்சி செயலாளர்கள் சக்திவேல், பிரபாகரன், அன்பு, கிளை செயலாளர்கள் ராமஜெயம், கோவிந்தன், முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.
ஜக்குப்பட்டி ஊராட்சி மோளையானூரில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பார்த்திபன் தலைமை தாங்கினார். தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், ஆட்சி மன்ற குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.ஆர்.முருகன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தென்னரசு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சுபாஷ் கந்தசாமி வரவேற்றார்.
விழாவில் முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான பி.பழனியப்பன் கலந்துகொண்டு 300 பேருக்கு இலவச வேட்டி- புடவை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பாதுகாக்கவும், தமிழகத்தை பாதுகாக்கவும் திறமை மிக்கவர்தான் முதல்-அமைச்சராக வர வேண்டும். அந்த திறமைகளை பெற்றவர் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மட்டுமே. எனவே அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிரஷர் குக்கர் சின்னத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மகேந்திரன், ஜீவா ராஜ்குமார், மணிகண்டன், சுகந்திஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் செல்லன் நன்றி கூறினார்.
கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.தங்கமணி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஜெயவேல், மகளிரணி செயலாளர் கவிதா, மாவட்ட நிர்வாகி பாலு, விவசாய அணி பொருளாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நெசவாளர் அணி துணை செயலாளர் முத்துகுமார் வரவேற்று பேசினார்.
விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளருமான பி.பழனியப்பன், ஆட்சி மன்ற குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.ஆர்.முருகன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்கள். இதில் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் பரிமளம், முன்னாள் கவுன்சிலர் குப்பு முருகேசன், நிர்வாகிகள் சி.ராசு, கோ.ஆனந்தன், தமிழ் தென்றல், தெய்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி சிங்காரவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story