பெருந்துறை ஒன்றியத்தில் 116 பேருக்கு நலத்திட்ட உதவிகள் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை ஒன்றியப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடந்தது.
ஈரோடு,
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை ஒன்றியப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு பெருந்துறை தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை 42 பேருக்கு வழங்கப்பட்டது. கணவனை இழந்த பெண்களுக்கான உதவித்தொகை 26 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 9 பேருக்கும் வழங்கப்பட்டது. ஆதரவற்ற பெண்களுக்கான உதவித்தொகை 10 பேருக்கும், பட்டா மாறுதல் 29 பேருக்கும் என மொத்தம் 116 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், கவுன்சிலர்கள் அப்புசாமி, பார்வதி ராஜ், பழனிச்சாமி, ஹேமலதா சம்பத், அருள்ஜோதி செல்வராஜ், பேரூர் அ.தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி, துரைராஜ் பாலசுப்பிரமணி, பெட்டிசன் மணி, மோகனசுந்தரம், பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, செந்தில், கோவிந்தசாமி, தங்கமுத்து, சண்முகசுந்தரம், டெய்லர் மணி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story