விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2021 12:27 AM IST (Updated: 22 Jan 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நெல்லை மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை,

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நெல்லை மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் விமல் வங்காளியார், நெல்லை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அரசு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நிர்வாகிகள் பாஸ்கர், ஈழவளவன், ஜெயக்குமார், செல்வராஜ், சங்கரன், தங்கபாண்டியன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story