மாவட்ட செய்திகள்

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் + "||" + Mumbai police summon Kangana

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன்

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன்
சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மும்பை, 

இந்தி நடிகை கங்கனா ரணாவத் மீது பிரபல சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், "இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பாலிவுட் திரையுலகில் நிலவும் பிரச்சினைகள் பற்றி நடிகை கங்கனா பேட்டி அளித்தார். அப்போது அவருக்கு ஹிருத்திக் ரோசனுடன் இருந்த உறவு பிரச்சினையில் அமைதி காக்கும்படி நான் அவரை மிரட்டியதாக கூறியுள்ளார். இந்த பொய் குற்றச்சாட்டு மூலம் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது" என்று கூறியிருந்தார். 

இதையடுத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி ஜூகு போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக பிப்ரவரி 1-ந் தேதி வரை கோர்ட்டு காலஅவசாகம் வழங்கி உள்ளது. இந்தநிலையில் ஜூகு போலீஸ் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை கங்கனாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

சமீபத்தில் தான் தேசத்துரோக வழக்கில் நடிகை கங்கனா மும்பை போலீஸ் நிலையத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
2. புத்தக பதிப்புரிமை மீறல் விவகாரம்; நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
ஆசிஷ் கவுல் என்ற எழுத்தாளர் ‘திதா: தி வாரியர் குயின் ஆப் காஷ்மீர்' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
3. ஹிருத்திக் ரோஷனுக்கு கோர்ட்டு சம்மன்
நடிகை கங்கனா ரணாவத்துக்கும், பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் கிருஷ் 3 இந்தி படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
4. நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார்; மும்பை கோர்ட்டு கருத்து
நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் என்று மும்பை கோர்ட்டு தெரிவித்துள்ளது.
5. நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் மும்பை கோர்ட்டு கருத்து
அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகளை இணைக்கும் போது நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் என்று மும்பை கோர்ட்டு கூறியுள்ளது.