சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பெண் போலீசார் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த பெண் போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
நெல்லை,
சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த 18-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
100 பெண் போலீசார்
இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி, பெண் போலீசாரின் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் 100 பெண் போலீசார் தலையில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் ஓட்டினர். இவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம் வரை பயணித்து ெபாதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுதவிர வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு வில்லை ஒட்டப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சிசில், இன்ஸ்பெக்டர் மகேசுவரி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜேஷ், பாத்திமா பர்வீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story