உளுந்தூர்பேட்டையில் 25-ந்தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் குமரகுரு எம்.எல்.ஏ. அறிக்கை


உளுந்தூர்பேட்டையில் 25-ந்தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் குமரகுரு எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2021 5:29 AM IST (Updated: 22 Jan 2021 5:29 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை,

அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு உளுந்தூர்பேட்டை திருச்சி - சேலம் ரவுண்டானா அருகே உள்ள திடலில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மேலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

தொண்டர்கள்

எனவே கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள், மகளிர் குழு நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள், தொண்டர்கள் உள்பட அனைவரும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story