திருப்பத்தூரில், சிறுபான்மையினருக்கான அரசின் நலத் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் - இயக்குனர் தலைமையில் நடந்தது


திருப்பத்தூரில், சிறுபான்மையினருக்கான அரசின் நலத் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் - இயக்குனர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 Jan 2021 5:30 PM IST (Updated: 22 Jan 2021 5:30 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் சிறுபான்மையினருக்கான அரசின் நலத் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினருக்கான அரசின் நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிவன்அருள் முன்னிலை வகித்தார். பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது தமிழக அரசு சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலமாக்களுக்கு அடையாள அட்டைகளை விரைவாக வழங்கவும், 50 சதவீத மானியத்தில் இரண்டு சக்கர வாகனம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் குழுக்கள் தொழில் செய்ய குழுக்கள் ரூ.10 லட்சம் நிதி திரட்டினால், அரசு ரூ.20 லட்சம் நிதியினை இக்குழுவிற்கு வழங்கி முன்னேற வழிவகுக்கும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரிசுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல்முனீர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story