குடியாத்தம் அருகே துணைவியாருடன் கூடிய வீரர்களின் நடுகற்கள் கண்டெடுப்பு
குடியாத்தம் அருகே துணைவியாருடன் கூடிய வீரர்களின் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோடிகுப்பம் பகுதியில் 3 நடுகற்கள் காணப்படுகிறது. அதில் 2 நடுகற்களை அப்பகுதிமக்கள் வழிபடுகின்றனர். மீதம் உள்ள மற்றொரு நடுகல் சாலையோரம் முட்புதரில் உடைந்து மண்ணில் புதைந்து கிடந்தது. அதை அப்பகுதி இளைஞர்கள் வெளியே எடுத்தனர்.
இந்த கற்கள் குறித்து வரலாற்று ஆர்வலரும் பழங்கால நாணய சேகரிப்பாளருமான தமிழ்வாணன் கூறுகையில், இந்த கற்கள் வீர மரணமடைந்த வீரர் அல்லது போரில் தலைமை பொறுப்பில் இருந்தவரை குறிப்பிடுகிறது.
நாயக்கர் காலத்தை சார்ந்தது. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் 3 கற்களிலும் உடன் துணைவியாரும் உள்ளனர். வீர மரணம் அடைந்த பின்னர் கணவருக்காக மனைவியும் உடன்கட்டை ஏறியதை வெளிக்காட்டுகிறது. ஒரு கல்லில் மட்டும் 2 பெண்கள் இருக்கிறார்கள். அந்த கல்லில் இடம் பெற்ற வீரருக்கு 2 மனைவிகள் இருப்பதை அது வெளிக்காட்டுகிறது. அதில் ஒரு மனைவி கையில் மதுகுடுவை வைத்துள்ளார். கணவருக்காக உடன்கட்டை ஏறவிருப்பம் இல்லாத பெண் மது அருந்தி பின்னர் உடன் கட்டை ஏறுவார் என வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றார்.
Related Tags :
Next Story