பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை: வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை - மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
வாடிப்பட்டி அருகே பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 12 ஆண்டு சிறைதண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே பட்டதாரி பெண் ஒருவர், தனது அக்காள் வீட்டில் தங்கி ஆசிரியர் தேர்வு எழுதுவதற்காக படித்து வந்தார்.
இந்தநிலையில் அய்யங்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி(21) என்பவர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை தந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், பட்டதாரி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றும், அவரது தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காகவும், பெண் வன்கொடுமை சட்டத்தின்படி பாலசுப்பிரமணிக்கு ரூ.1 லட்சம் அபராதம், 12 ஆண்டு சிறைதண்டணையும் வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Related Tags :
Next Story