குருபரப்பள்ளி அருகே வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண்
குருபரப்பள்ளி அருகே வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
குருபரப்பள்ளி,
ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த ஹரிபாபு என்பவரது மகன் ஸ்ரீகாந்த் (வயது 20) .இவர், ஓசூர் முனீஸ்வரன் நகரை சேர்ந்த பைரோஸ் என்பவரது கறிக்கோழி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் பைரோஸ் மனைவிக்கும், ஸ்ரீகாந்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பலமுறை கண்டித்தும் ஸ்ரீகாந்த் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பைரோஸ், தனது நண்பர்கள் 3 பேர் உதவியுடன் ஓசூரில் இருந்து ஸ்ரீகாந்த்தை காரில் கடத்தினர். குருபரப்பள்ளி -கே.ஜி.எப். நெடுஞ்சாலையில் நடுசாலை அருகே பந்தலூர் பகுதிக்கு அழைத்து சென்றவர்கள், ஸ்ரீகாந்்தை கழுத்தை கத்தியால் அறுத்து அங்கேயே போட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த குருபரப்பள்ளி போலீசார், படுகாயத்துடன் இருந்த ஸ்ரீகாந்்தை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பைரோஸ் உள்ளிட்ட 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி நீதித்துறை நடுவர்-2 கோர்ட்டில் பைரோஸ் (28), ஓசூர் கே.சி.சி நகரை சேர்ந்த வாசீம் (23) ஆகியோர் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story