மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சாரல் மழை + "||" + Heavy rains cause fear in Thoothukudi

தூத்துக்குடியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சாரல் மழை

தூத்துக்குடியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சாரல் மழை
தூத்துக்குடியில் நேற்று காலையில் பெய்த சாரல் மழை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் வீடுகளை சூழ்ந்து கிடக்கிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.


இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் மோட்டார்கள் வைத்தும், டேங்கர் லாரிகள் மூலமும் மழைநீரை உறிஞ்சி அப்புறப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வெயிலின் தாக்கமும் கடந்த 4 நாட்களாக அதிகமாக இருந்தது. இதனால் மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. முத்தம்மாள் காலனி, அய்யப்பன்நகர், தனசேகரன் நகர் பகுதியில் தொடர்ந்து மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

சாரல் மழை

இனிமேல் மழை வர வாய்ப்பு இல்லை என்று மக்கள் எண்ணி இருந்த நிலையில், நேற்று காலையில் திடீரென மேக கூட்டங்கள் திரண்டன. 9.30 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

தற்போதுதான் வெள்ளநீர் வடியத் தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால் தூத்துக்குடி மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனர். ஆனால் இந்த மழை சிறிது நேரத்தில் நின்று விட்டது. அதன்பிறகு வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கியது. அதன் பின் னரே மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பழனி அருகே பலத்த மழை: தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் பிணத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்
பழனி அருகே பலத்த மழை காரணமாக தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து சென்றனர்.
2. தொடர் மழை: பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது.
3. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழைக்கு 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
4. மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் தொடர் மழை: தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கிய நெற்கதிர்கள்
மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வயலில் தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியதால் அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.