மராட்டியத்தில் 16 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியது


மராட்டியத்தில் 16 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியது
x
தினத்தந்தி 22 Jan 2021 9:50 PM GMT (Updated: 22 Jan 2021 9:50 PM GMT)

மராட்டியத்தில் 16 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது தெரியவந்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்துக்கு கொரோனாவை அடுத்து பறவை காய்ச்சல் மூலம் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி முதல் முறையாக பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதையடுத்து பல மாவட்டங்களில் பறவைகள் மர்மான முறையில் செத்து விழுந்தன. இதையடுத்து உயிரிழந்த பறவைகளின் மாதிரி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது மாநிலத்தில் 16 மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் பரவி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "குறைந்தது 16 மாவட்டங்களில் இருந்து மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மாதிரிகளில் பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

கோழிகள் அழிப்பு

இதற்கிடையே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் இதுவரை 39 ஆயிரத்து 483 கோழிகள், 35 ஆயிரத்து 515 முட்டைகள், 8 வாத்துகள், பறவைகளுக்கான 53 ஆயிரத்து 46 கிலோ தீவனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநிலத்தில் இதுவரை 14 ஆயிரத்து 524 பறவைகள் பறவை காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 732 பறவைகள் உயிரிழந்து இருப்பதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

Next Story