திருச்சி மாவட்ட கலெக்டருக்கு சிறந்த தேர்தல் அதிகாரி விருது


திருச்சி மாவட்ட கலெக்டருக்கு சிறந்த தேர்தல் அதிகாரி விருது
x
தினத்தந்தி 23 Jan 2021 4:42 AM IST (Updated: 23 Jan 2021 4:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்ட கலெக்டர் சிறந்த தேர்தல் அதிகாரி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் திறம்பட செயல்பட்டதற்காகவும், வாக்காளர் சேர்ப்பில் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும் மாநில அளவில் சிறந்த தேர்தல் அதிகாரி விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு தமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டாவது இடத்தை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையும், மூன்றாவது இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலாவும் பெற்றுள்ளனர்.

Next Story