குடியரசு தினத்தையொட்டி திருச்சி மாநகர போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


குடியரசு தினத்தையொட்டி திருச்சி மாநகர போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 23 Jan 2021 4:42 AM IST (Updated: 23 Jan 2021 4:45 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினத்தையொட்டி திருச்சி மாநகர போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் எஸ்.சிவராசு தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதையொட்டி அணிவகுப்பில் பங்கேற்க உள்ள போலீசார் திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நேற்று துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலமாகவே தொடர்ந்து பாடம் நடத்தப்படுகிறது. இதனால், வருகிற குடியரசு தினத்தன்று மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி அனுமதிக்கப்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு 15-ந் தேதி நடந்த சுதந்திர தினத்தன்றும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story