மூலைக்கரைப்பட்டி பகுதியில் ரூ.75 லட்சத்தில் சாலைப்பணிகள்; ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட லெத்திகுளம், அரசனார்குளம் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடக்கவிழா நடைபெற்றது.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மூலைக்கரைப்பட்டி செயல் அலுவலர் மகேஸ்வரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மலையன்குளம் சங்கரலிங்கம், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பெருமாள், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஞானமுத்து, மாநில திட்டக்குழு உறுப்பினர் கணபதி, ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story