வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபாா்க்கும் பணி: கலெக்டா் ஆய்வு
வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை கலெக்டா் ஆய்வு செய்தாா்
கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு கள்ளக்குறிச்சி தச்சூர் கைகாட்டியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்தின் தொழில் நுட்ப பொறியாளர்கள் தலைமையில் சரிபார்க்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பெல் நிறுவன ஊழியர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் பெல் நிறுவன பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story