காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி காரைக்காலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி காரைக்காலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2021 5:43 AM IST (Updated: 23 Jan 2021 5:43 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு கூடினர்.

காரைக்கால்,

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு கூடினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணை தலைவர்கள் அய்யப்பன், சுப்புராஜ், ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் முத்தமிழ் குணாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

1.1.2004-க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் காலியாகவுள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி, புதுச்சேரி அரசையும், கவர்னரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story