மாவட்ட செய்திகள்

புதுவை கடலுக்கு அடியில் 1 டன் முகக்கவசங்கள் சேகரிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ + "||" + 1 ton of masks collection under the sea of Puduvai Video goes viral on social media

புதுவை கடலுக்கு அடியில் 1 டன் முகக்கவசங்கள் சேகரிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

புதுவை கடலுக்கு அடியில் 1 டன் முகக்கவசங்கள் சேகரிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ
புதுவையில் கடலுக்கு அடியில் இருந்து 1 டன் முகக்கவசங்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரி,

புதுவை கோலாஸ் நகரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வருபவர் அரவிந்த். இவர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி அளிப்பது வழக்கம்.

சமீபத்தில் புயல், மழைக்குப் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் நீச்சல் பயிற்சியை தொடங்கினார். அப்போது கொரோனாவிற்காக அரசு வழிகாட்டுதலின்படி பயன்படுத்தி விட்டு பொதுமக்களால் தூக்கி வீசப்பட்ட முக கவசங்கள் ஆறுகள் மூலமாக அடித்துச் செல்லப்பட்டு கடலுக்கு அடியில் தேங்கிக் கிடப்பது தெரியவந்தது.


இதையடுத்து மாசுபடுதலில் இருந்து கடலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக அந்த முகக்கவசங்களை அகற்றுவது என முடிவு செய்தார். அதன்படி பாதுகாப்பு உடை அணிந்து தன்னுடன் பயிற்சியில் இருக்கும் 5 பேருடன் அரவிந்த் கடலுக்கு சென்றார்.

வைரலாகும் வீடியோ

நடுக்கடலுக்கு நீந்திச் சென்ற அவர் 60 அடி ஆழம் இறங்கி அடியில் தேங்கிக் கிடந்த முகக் கவசங்களை சேகரித்தார். இதை அவர்களுடன் சென்றிருந்த மற்ற வீரர்கள் வீடியோவில் பதிவு செய்தனர்.

இந்த காட்சிகளை அரவிந்த் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பயிற்சியாளர் அரவிந்த் கூறும் போது, ‘கடலுக்கு அடியில் இன்னும் தேங்கி கிடக்கும் முகக் கவசங்களை நான் தொடர்ந்து அகற்றுவேன்’ என்றார்.

கடலுக்கு அடியில் இருந்து சுமார் 1 டன் எடைக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை சேகரித்து கரைக்கு கொண்டு வந்து அப்புறப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை தெருவில் இளைஞர் ஒருவர் தயாரிக்கும் பறக்கும் தோசை
மும்பை தெருவில் இளைஞர் ஒருவர் பறக்கும் தோசை தயாரித்து கொடுக்கிறார்
2. புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் ஆபாச பேச்சு - ஒரு எஸ்.ஐயின் காதல் லீலை ஆடியோ
புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் சேட்டை செய்த எஸ்.ஐ. -எஸ்.ஐ. பேச்சுக்கு விடாமல் பதில் கொடுக்கும் பெண்